30 பேருக்கு இலவச தையல் எந்திரங்கள்; அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்

 30 பேருக்கு இலவச தையல் எந்திரங்கள்; அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்

தமிழக அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தையல் பயிற்சி மேற்கொண்டவா்களுக்கு சமூகநலத்துறையின் சார்பில்  இலவச தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

 தூத்துக்குடி டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி பிரேமலதா தலைமை தாங்கினார்,

சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு 3.60 லட்சம் மதிப்பீல் இலவச தையல் எந்திரங்களை  சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

விழாவில் அவர் பேசுகையில், “அரசின் திட்டங்களை பெற்றுள்ள நீங்கள் இதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். 

நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட பொறுப்பு அலுவலர் காயத்திாி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபிபெர்னான்டோ, குழந்தை வளர்ச்சி திட்ட பொறுப்பு அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *