விபத்தில் இறந்த 3 பெண்கள் குடும்பங்களுக்கு அரசு நிதி உதவி
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே முக்காணி கிராமத்தில் கடந்த 23.6.24 அன்று தெரு குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதியதில் . நட்டார் சாந்தி , அமராவதி , .பார்வதி ஆகிய 3 பெண்கள் இறந்து போனார்கள்.
அவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி ரூ.3 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் .கோ.லட்சுமிபதி தலைமையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி.எஸ்.அமிர்தராஜ் நேற்று வழங்கினார். விபத்தில் காயமடைந்த சண்முகத்தாய் குடும்பத்தினருக்கு ரூ.1லட்சம் வழங்கப்பட்டது, திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன், ஏரல் வட்டாட்சியர் கோபால் ஆகியோர் உடனிருந்தனர்.