இலவச மருத்துவ முகாம்

கோவில்பட்டியில் எ.கே.மாறன் டிரஸ்ட் மற்றும் கார்த்திக் மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. பிரபல அறுவைசிகிச்சை, லேபராஸ்கோபிக் நிபுணருமான டாக்டர் நரேன் கார்த்திக் கலந்து கொண்டு சிகிச்சை மேற்கொண்டார்.
முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் இலவச மருத்துவ ஆலோசனை, ரத்தபரிசோதனைகள், செய்யப்பட்டு, மருந்துகளும் வழங்கப்பட்டன.முகாமில்
டாக்டர்கள் செல்லம்மாள், மாறன்,ரக்ஷா கார்த்திகா, மோகனப்பிரியா ஆகியோர் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.
முகாமில் கோவில்பட்டி சுற்றுவட்டார பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
