ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்
கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா சேவாஅறக்கட்டளை சார்பில் 34 வது மாத அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டி வேலாயுதபுரம் அன்னை ஸ்பத்திரகாளி அம்மன்,காளியம்மன் கோவில் முன்பு நடைபெற்றது ..
நிகழ்ச்சிக்கு கூட்டுறவு வங்கி நகர முன்னாள் தலைவர் லவ ராஜா வரவேற்றார் . லட்சுமி நாட்டு மருந்து கடை அதிபர் பெரியசாமி,கோவில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மந்திர சூடாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலாயுதபுரம் நாடார் உறவின் முறை சங்கத் தலைவர் வேல் முருகேசன் தலைமை தாங்கினார். தொழிலதிபர்கள் அருண் பேக்கரி மாடசாமி, ஸ்ரீ விக்னேஸ்வரி எண்டர்பிரைசஸ் அசோக், ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்கத் துணைத் தலைவர் சண்முகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி பொங்கல் பிரசாதம் வழங்கினார். கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதுநிலை குடிமை மருத்துவர் டாக்டர் ஸ்ரீ வெங்கடேஷ் அன்னதானத்தை துவக்கி வைத்தார். ராகவேந்திரா சேவாஅறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி,பொருளாளர் கார்த்திகேயன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன்,பாலமுருகன்,கதிரேசன் , காளிராஜ்,செல்வம், சண்முகசுந்தரம், எஸ்பி பாண்டியன்,தங்கராஜ், சுப்பிரமணியன்,முத்து மாரியப்பன், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர் .







