சோனியா, ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்திப்பு


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 பேர் வெற்றி பெற்று எம். பி. க்கள் உள்ளனர்.
டெல்லியில் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக முகாமிட்டுள்ள இவர்கள் அனைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்தனர்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரை 9 பேரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள்உடன் இருந்தனர்.
