• June 7, 2025

நடிகர் விஜய் தொடங்கிய புதிய கட்சி: பதிவு செய்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்றது  

 நடிகர் விஜய் தொடங்கிய புதிய கட்சி: பதிவு செய்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்றது  

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை, நடிகர் விஜய் தொடங்குவதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டார்.

இதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தை, மாநில கட்சியாக பதிவு செய்வதற்கான கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பம், கடந்த பிப்ரவரியில் வழங்கப்பட்டது. அந்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் நிலுவையில் வைத்தது.  

இதற்கிடையே கட்சியின் பொதுச் செயலராக புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்த், பொருளாளராக வெங்கட்ரமணன், தலைமை நிலைய செயலராக கடலுார் ராஜசேகர், இணை கொள்கை பரப்பு செயலராக, வேலுார் தாஹீரா ஆகியோரை, விஜய் நியமித்து இருந்தார்,

இந்த விபரங்களும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன இந்த நிலையில், விண்ணப்பத்தை தற்போது ஏற்றுள்ள தேர்தல் ஆணையம், கட்சி தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், வரும் 11ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று  கெடு விதித்துள்ளது..

 ஆட்சேபனைகள்எதுவும்  வராத பட்சத்தில், தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக பதிவு செய்து, இம்மாத இறுதிக்குள் தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *