கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி நாளை முதல் 3 நாட்கள் தியானம்;பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
பிரதமர் மோடி, 3 நாள் பயணமாக நாளை (வியாழக்கிழமை) கன்னியாகுமரி வருகிறார் உத்தரபிரதேசத்தில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் கன்னியாகுமரி வந்து சேர்கிறார்.
அங்கிருந்து தனி படகில் கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்கிறார். சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்ட பின்னர் அங்குள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் பாறையில் பதிந்துள்ள பகவதி அம்மன் கால் பதித்த இடத்தை மலர் வைத்து வணங்குகிறார்.
அதனைத் தொடர்ந்து மண்டபத்தில் பிரதமர். மோடி. நாளை மாலை 3.30 மணிக்கு. ஆரம்பித்துஜூன் 1 ந்தேதி மாலை 3.30 .மணிக்கு நிறைவு செய்கிறார்.
1ம் தேதி தியானத்தை முடித்துவிட்டு விவேகானந்தர் நினைவு மண்டப பாறையில் இருந்து வெளியே வரும் அவர் படகு மூலம் கரை திரும்புகிறார். அன்னைய தினம் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் வழியாக டெல்லி செல்வதாக அவருடைய பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமரின் தியான நிகழ்ச்சியை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வலையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்புடன் 4 ஆயிரம் போலீசார் இன்று மாலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
நீர்மூழ்கி கப்பல் மூலமாக. பலத்த. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும். உளவுத்துறை போலீசார். தெரிவித்தனர்.

விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் தனிமையில் தியானம் செய்யவுள்ளதால், பூம்புகார் சுற்றுலா படகு குழாம் முழுவதுமாக பிரதமர் பாதுகாப்பு துறையின் வசம் வந்துள்ளது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளின் இயக்கம் 30ம் தேதி முதல் 1ம் தேதி வரை 3 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
குமரி கடல் பகுதியில் கடற்படையினர் பாதுகாப்பு ரோந்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் கன்னியாகுமரி வருகையையொட்டி தூத்துக்குடி கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படை கப்பல்கள், அதிநவீன ஹெலிகாப்டர் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உள்ளிட்டோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்







