6-வது நாள் அகில இந்திய ஆக்கிபோட்டி: முதல் ஆட்டத்தில் சென்னை, அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணி வெற்றி

கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெற்று வரும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான போட்டியின் 6-ம் நாளான இன்று ( 29.05.2024) புதன்கிழமை காலை 7 மணியளவில் 21வது லீக் போட்டி நடைபெற்றது.
சென்னை, ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்ஸைஸ் அணியும் சென்னை, அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணியும் மோதின.
ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் சென்னை, அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணி வீரர் அபரன் சுதேவ் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
42-வது நிமிடத்தில் சென்னை, அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணி வீரர் சூரிய பிரகாஷ் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
45-வது நிமிடத்தில் சென்னை, அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணி வீரர் தலெப் ஷா ரஹிம் ஷா பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.

49-வது நிமிடத்தில் சென்னை, அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணி வீரர் தலெப் ஷா ரஹிம் ஷா பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
54-வது நிமிடத்தில் சென்னை, ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்ஸைஸ் அணி வீரர் அபிஷேக் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
இறுதியில் 4:1 என்ற கோல் கணக்கில் சென்னை, அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணி வெற்றி பெற்றது.
அஸ்வனி குமார் ,பாலாஜி குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சென்னை, அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணி வீரர் சூரிய பிரகாஷ், சிறந்த ஆட்டக்காரர் விருது பெற்றார்.
இன்று மாலை ஆட்டங்கள்
இன்று மாலை 5.15 மணியளவில் நடைபெறும் 22வது லீக் போட்டியில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும் கர்நாடகா, ஹாக்கி பெல்லாரி அணியும் மோதுகின்றன.
மாலை 6.45 மணியளவில் நடைபெறும் 23வது லீக் போட்டியில் நியூ டெல்லி, சென்ட்ரல் செக்ரிட்டேட் அணியும் பெங்களூரு, கனரா பேங்க் அணியும் மோதுகின்றன.
இரவு 8.15 மணியளவில் நடைபெறும் 24வது லீக் போட்டியில் சென்னை, இன்டக்ரல் கோச் பேக்டரி அணியும் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியும் மோதுகின்றன.
