• June 8, 2025

3வது நாள் போட்டி : சென்னை அணி வெற்றிக்கு வழிவகுத்த கோவில்பட்டி மாரீஸ்வரன் 

 3வது நாள் போட்டி : சென்னை அணி வெற்றிக்கு வழிவகுத்த கோவில்பட்டி மாரீஸ்வரன் 

 கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான  அகில இந்திய ஆக்கிப் போட்டிகள்  நடைபெற்று வருகிறது.

 போட்டியின்போட்டியின் மூன்றாம்  நாளான இன்று 26.05.2024 (ஞாயிற்றுகிழமை) காலை 7 மணியளவில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் சென்னை இன்கம் டேக்ஸ் அணியும்  ஒடிசா டாடா நாவல் ஹாக்கி அகாடமி அணியும்  மோதின.

 ஆட்டம் தொடங்கிய 11-வது நிமிடத்தில் ஒடிசா அணி வீரர் ஆர்யன் சேஸ்  பீல்டு கோல்  முறையில் ஒரு கோல் போட்டார்.   

21-வது நிமிடத்தில் சென்னை அணி வீரரான கோவில்பட்டி மாரீஸ்வரன் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.

 25-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் வினோத் பெனால்டி கார்னர்  முறையில் ஒரு கோல் போட்டார். 

26-வது நிமிடத்தில் ஒடிசா வீரர் ரோஹித் குல்லு  பெனால்டி கார்னர்  முறையில் ஒரு கோல் போட்டார். 

38-வது நிமிடத்தில் ஒடிசா வீரர்  ரோஹித் குல்லு  பெனால்டி கார்னர்   முறையில் மீண்டும் ஒரு கோல் போட்டார்.

43-வது நிமிடத்தில் சென்னை  அணி வீரர் மாரீஸ்வரன் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். 

47-வது நிமிடத்தில் சென்னை வீரர் கார்த்தி  பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். 

53-வது நிமிடத்தில் ஒடிசா வீரர் ரோஹித் குல்லு  பெனால்டி கார்னர்  முறையில் ஒரு கோல் போட்டார். 

56-வது நிமிடத்தில் சென்னை  அணி வீரர் கார்த்தி  பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். 

59-வது நிமிடத்தில் சென்னை  அணி வீரர் மாரீஸ்வரன்  பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். 

இறுதியில் 6:4 என்ற கோல் கணக்கில் சென்னை இன்கம் டேக்ஸ் அணி வெற்றி பெற்றது. சென்னை அணி வீரரான கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் 3 கோல்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியாஸ் கவுடா  மற்றும் சுரேஷ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

சிறந்த ஆட்டக்காரர் விருது சென்னை இன்கம் டேக்ஸ் அணி வீரர் மாரீஸ்வரன்க்கு வழங்கப்பட்டது.  

 மாலை 5.15 மணியளவில் நடைபெறும் 10வது லீக் போட்டியில் மும்பை யூனியன் பேங்க் அணியும் போபால்  நேஷனல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் அணியும்  மோதுகின்றன.

மாலை 6.45 மணியளவில் நடைபெறும் 11வது லீக் போட்டியில் சென்னை இந்தியன் பேங்க் அணியும் சென்னை தமிழ்நாடு லெவன் அணியும்  மோதுகின்றன.

இரவு 8.15 மணியளவில் நடைபெறும் 12வது லீக் போட்டியில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும் ஹைதராபாத் ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா அணியும்  மோதுகின்றன.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *