இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை ஆக்கி : பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூருவிடம் கோவில்பட்டி அணி தோற்றது

கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல் வெளி விளையாட்டு மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது.
போட்டியின் இரண்டாவது நாளான இன்று காலை நடந்த 5வது லீக் போட்டியில் சென்னை அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரேகிரியேஷன் கிளப் அணியும், கர்நாடகா ஹாக்கி பல்லாரி அணியும் மோதின.இதில் 2:1 என்ற கோல் கணக்கில் அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரேகிரியேஷன் கிளப் அணி வெற்றி பெற்றது.
.மாலை 5.15 மணியளவில் நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் நியூ டெல்லி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியுடன் சென்னை ஜி எஸ் டி & சென்ட்ரல் எக்ஸைஸ் அணி மோதியது.
ஆட்டம் தொடங்கிய 20-வது நிமிடத்தில் சென்னை ஜி எஸ் டி & சென்ட்ரல் எக்ஸைஸ் அணி வீரர் பாலாஜி பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
37-வது நிமிடத்தில் நியூ டெல்லி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி வீரர் தல்விந்தர் சிங் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
45-வது நிமிடத்தில் நியூ டெல்லி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி வீரர் உத்தம் சிங் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
53-வது நிமிடத்தில் நியூ டெல்லி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி வீரர் தல்விந்தர் சிங் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
59-வது நிமிடத்தில் நியூ டெல்லி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி வீரர் குர்ஜிந்தர் சிங் பெனால்டி கார்னெர் முறையில் ஒரு கோல் போட்டார்.
இறுதியில் இதில் 4:1 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி வெற்றி பெற்றது.
அஸ்வானி குமார் மற்றும் பாலாஜி குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
சிறந்த ஆட்டக்காரர் விருது சென்னை ஜி எஸ் டி & சென்ட்ரல் எக்ஸைஸ் அணி வீரர் அரவிந்தனுக்கு வழங்கப்பட்டது.
மாலை 6.45 மணியளவில் நடைபெற்ற 7வது லீக் போட்டியில் நியூ டெல்லி சென்ட்ரல் செக்ரிட்டேட் அணியும் சென்னை இன்டக்ரல் கோச் பேக்டரி அணியும் மோதின.
ஆட்டம் தொடங்கிய 21-வது நிமிடத்தில் நியூ டெல்லி சென்ட்ரல் செக்ரிட்டேட் அணி வீரர் கோவிந்த் சிங் ராவத் பெனால்டி ஸ்ட்ரோக் முறையில் ஒரு கோல் போட்டார்.
26-வது நிமிடத்தில் சென்னை இன்டக்ரல் கோச் பேக்டரி அணி வீரர் ஷியாம் குமார் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
58-வது நிமிடத்தில் நியூ டெல்லி சென்ட்ரல் செக்ரிட்டேட் அணி வீரர் சைலேந்தர் பந்தலா பெனால்டி கார்னெர் முறையில் ஒரு கோல் போட்டார்.
இறுதியில் 2:1 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி சென்ட்ரல் செக்ரிட்டேட் அணி வெற்றிபெற்றது.
பிரியாஸ் கவுடா மற்றும் சுரேஷ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
சிறந்த ஆட்டக்காரர் விருது நியூ டெல்லி சென்ட்ரல் செக்ரிட்டேட் அணி வீரர் வினய் ராணாக்கு வழங்கப்பட்டது.
இரவு 8.15 மணியளவில் நடைபெற்ற 8வது லீக் போட்டியில் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியும் பெங்களூரு, கனரா பேங்க் அணியும் மோதின.

ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் பெங்களூரு, கனரா பேங்க் அணி வீரர் சேத்தன் மாலப்பா பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
19-வது நிமிடத்தில் பெங்களூரு, கனரா பேங்க் அணி வீரர் நிக்கின் திம்மையா பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
30-வது நிமிடத்தில் பெங்களூரு, கனரா பேங்க் அணி வீரர் சேத்தன் மாலப்பா பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
34-வது நிமிடத்தில் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி வீரர் மனோஜ் குமார் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
37-வது நிமிடத்தில் பெங்களூரு, கனரா பேங்க் அணி வீரர் பிபின் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
38-வது நிமிடத்தில் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி வீரர் நிஷி தேவ அருள் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
56-வது நிமிடத்தில் பெங்களூரு, கனரா பேங்க் அணி வீரர் பாரத் மஹாலிங்கப்பா பெனால்டி கார்னெர் முறையில் ஒரு கோல் போட்டார்.
இறுதியில் 5:2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு, கனரா பேங்க் அணி வெற்றி பெற்றது.
முனவர் பாஷா மற்றும் சரவணன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது பெங்களூரு, கனரா பேங்க் அணி வீரர் தீட்சித்க்கு வழங்கப்பட்டது.
