• April 27, 2024

தூத்துக்குடி தமாகா வேட்பாளர் விஜயசீலன் வெற்றிக்கு ஒற்றுமையுடன் உழைக்க கட்சி தொண்டர்கள் உறுதி

 தூத்துக்குடி தமாகா வேட்பாளர் விஜயசீலன் வெற்றிக்கு ஒற்றுமையுடன் உழைக்க கட்சி தொண்டர்கள் உறுதி

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் எஸ் டி ஆர் விஜயசீலனை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

 இந்த கூட்டத்தில்  மாவட்ட மேற்பார்வையாளர் போத்தீஸ் ராமமூர்த்தி மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சரவண கிருஷ்ணன், வேல் ராஜா, கிஷோர் ,பொருளாளர் கே கே ஆர் கணேசன், அனைத்து மண்டல் தலைவர்கள் அணி பிரிவுகளின் மாவட்ட தலைவர்கள் மாநிலச் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு வெற்றி வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலனை  அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் உறுதி மொழி எடுத்துகொண்டனர்.

த மா க வடக்கு மாவட்ட தலைவர் கே.பி,.ராஜகோபால் மற்றும் நிர்வாகிகளும் கூட்டத்தில்  கலந்து கொண்டனர்.

இந்த தகவலை வடக்கு மாவட்டட ஊடகபிரிவு தலைவர் அம்மன் மாரிமுத்து தெரிவித்து உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *