• April 27, 2024

கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் பாதம் கழுவும் நிகழ்வு

 கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் பாதம் கழுவும் நிகழ்வு

இயேசு கிறிஸ்து பெரிய வியாழன் அன்று யூதாசால் காட்டிக் கொடுக்கப்பட்டு பெரிய வெள்ளி அன்று சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை தழுவி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வருவார்.

பெரிய வியாழனன்று இயேசு கிறிஸ்து மூன்று முக்கிய நிகழ்வுகளை நிகழ்த்தினார்

 1. தன் சீடர்களுடன் அமர்ந்து தான் கடைசி இரவு உணவு உட்கொண்டு  நற்கருணையை ஏற்படுத்தினார் .

2 . தன் சீடர்களின் பாதங்களை கழுவி தன் மேலாடையால் துடைத்து முத்தமிட்டு நான் உங்களுக்கு பணிவிடை செய்வது போல நீங்களும் மற்றவர்களுக்கு பணிவிடை  செய்யுங்கள் என்றார்.

3. குருத்துவத்தை ஏற்படுத்தினார். குருத்துவம் என்றால் இயேசு தன் சீடர்களுக்கு தான் ஏற்படுத்திய நற்கருணையை கொடுக்கும் நிகழ்வு இது எல்லா தேவாலயங்களிலும் குருவானவர்கள் மக்களுக்கு இறை செய்தியை அறிவித்து நற்கருணையை வழங்கி அவர்களுக்கு பணிவிடை  செய்ய வேண்டும் என்பதாகும் 

இவற்றை நினைவு படுத்தும் வகையில் புனித சூசையப்பர் திருத்தலத்தில் வியாழன் மாலை 6.30 மணியளவில் திருத்தல பங்குத்தந்தை சார்லஸ் அடிகளார் ,

 உதவி பங்குத்தந்தை அந்தோணிராஜ் அடிகளார் , பெங்களூர் பேசில் அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்கள்.

 இயேசு கிறிஸ்து தன் 12 சீடர்களின் பாதங்களை கழுவி பணிவிடை செய்ததை நினைவு கூரும் வகையில் திருத்தல உதவி பங்கு தந்தை  அந்தோணிராஜ் அடிகளார் 12 இறைமக்களின் பாதங்களை கழுவி தன் மேலாடையால் துடைத்து முத்தமிட்டு ரொட்டியும், புத்தாடைகளும் வழங்கினார்.

 பின் நற்கருணை இடமாற்ற பவனி நடைபெற்று நற்கருணையானது இடமாற்றி வைக்கப்பட்டு இரவு 12 மணிவரை ஆராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டனர் .

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *