பாமக வேட்பாளர் பட்டியலில் தங்கர் பச்சான் ; அன்புமணி ராமதாஸ் போட்டியிடவில்லை

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ளத். அந்த கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
1திண்டுக்கல்- கவிஞர் திலகபாமா
2அரக்கோணம் வக்கீல் பாலு
3தருமபுரி-அரசாங்கம்
4சேலம்-அண்ணாதுரை
5விழுப்புரம்- முரளி சங்கர்
6கள்ளக்குறிச்சி-தேவதாஸ்
7ஆரணி- கணேஷ்குமார்
8மயிலாடுதுறை- ஸ்டாலின்
9கடலூர் -இயக்குனர் தங்கர்பச்சான்
காஞ்சீபுரம் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கபடவில்லை.
அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் போட்டிடுவார் என்று எதிர்பர்க்கபப்ட்ட நிலையில் அவரது பெயர் வேட்பாளர் பட்டியிலில் இடம்பெறவில்லை.
2019 மக்களவை தேர்தலில் போட்டியிடு தோல்வி அடைந்தார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது.இதனால் அவர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகவே தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.
