பாஜக வேட்பாளர் முதல் கட்ட பட்டியல்; தமிழிசை- தென்சென்னை, அண்ணாமலை -கோவை, நயினார் நாகேந்திரன் -நெல்லை
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் புதிதாக பாஜக தலைமையில் ஒரு கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணி இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிந்துவிட்டது.
20 தொகுதிகளில் பா ஜனதா போட்டியிடுகிறது. இதில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சி மேலிடம் இன்று மாலை அறிவித்தது. அதன் விவரம் வருமாறு:-
தென்சென்னை – தமிழிசை சௌந்தரராஜன்
மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம்
வேலூர் – ஏ.சி சண்முகம்
கிருஷ்ணகிரி – நரசிம்மன்
நீலகிரி ( தனி ) – எல்.முருகன்
கோயம்புத்தூர் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பெரம்பலூர் – பாரிவேந்தர்
நெல்லை – நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி- பொன்.ராதாகிருஷ்ணன்







