அதிமுக 2 -ம் கட்ட வேட்பாளர் பட்டியல்; 1 8 தொகுதிகளில் தி.மு.க.வுடன் நேரடி போட்டி

அதிமுக 2 -ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. மொத்தம் 18 தொகுதிகளில் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது.நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி அதிமுகவின் 16 பேர் இடம்பெற்ற முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது.
இன்று 10 பேர் இடம்பெற்ற இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
ஸ்ரீபெரும்புதூர்-பிரேம்குமார், வேலூர்-பசுபதி, தருமபுரி-அசோகன் ,திருவண்ணாமலை-கலியபெருமாள் ,கள்ளக்குறிச்சி-குமரகுரு ,திருப்பூர்-அருணாசலம்,நீலகிரி-யோகேஷ் தமிழ்ச்செல்வன், கோவை-சிங்கை ராமச்சந்திரன், சிவகங்கை- சேவியர் தாமஸ்
அதிமுக-திமுக நேரடி போட்டி
மொத்தம் 18 தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
