காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் குழு பொன்னுச்சாமி பாண்டியன் தலைமையில் தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொறுப்பாளர்கள் சுப்புராயலு, அருண்பாண்டியன், மாரிமுத்து,திருப்பதி ராஜா,ராஜசேகர்,சண்முகராஜ், செல்லத்துரை, வின்சென்ட்,மரியோ தங்கராஜ்,உமா சங்கர்,பிச்சைக்கனி, இளைஞர் காங்கிரஸ் சுடலைமணி மற்றும் ஊடக செய்தி தொடர்பாளர் பிரிவு தலைவர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
