• June 8, 2025

கோவில்பட்டியில் இன்று 102 டிகிரி வெயில்

 கோவில்பட்டியில் இன்று 102 டிகிரி வெயில்

இன்று (14.3.2024) முதல் 16.3.2024 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று வெயில் அளவு அதிகமாக இருந்தது. கோவில்பட்டியில் வழக்கத்தை விட அதிகக் வெயில் வாட்டி வதைத்தது.

காலை 11 மணிக்கெல்லாம் வெயில் சுள்… என்று அடித்தது.மதிய வேளையில் அனலாக கொதித்தது. வீடு, அலுவலகங்களில் மின்விசிறிகள் சுழன்றாலும் சூடான காற்றை வெளிப்படுத்தின. இதன் காரணமாக உடல் சூடேறியது.

மதிய வேளையில் வெளி நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. இளநீர், குளிர்பான கடைகளில் கூட்டம் அதிகம் தென்பட்டது. கோவில்பட்டியில் இன்றையை உச்சகட்ட வெயில் அளவு 102 டிகிரி பாரன்ஹிட் அளவாக இருந்தது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *