• June 8, 2025

அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்திய பா.ம.க.,தேமுதிக கட்சிகள் பா.ஜனதா பக்கம் சாய்கிறது

 அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்திய பா.ம.க.,தேமுதிக கட்சிகள் பா.ஜனதா பக்கம் சாய்கிறது

அதிமுக கூட்டணியில் பா.ம.க.மற்றும் தேமுதிக கட்சிகள் பேச்சு நடத்தி வந்தன. இந்த கட்சியினர் கேட்கும் தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்த நிலையில் பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் டெல்லியில் பா.ஜனதா தலைவர்களுடன் ரகசிய ஆலோசனை மேற்கொண்டார். அந்த கட்சியுடன் கூட்டணி தொடர்பான பேச்சு தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த் நிலையில் அதிமுகவுடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கும் தேமுதிக வும் பா.ஜனதா பக்கம் சாய்வதாக தெரிகிறது.கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படும் பட்சத்தில் இரண்டு கட்சிகளும் பா.ஜனதா கூட்டணியில் சேரக்கூடும் என்பது உறுதியாக தெரிகிறது.

இதனால் அதிமுக கூட்டணியில் பிரதான கட்சிகள் இல்லை என்பதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *