காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சியான காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வத்தது.
இந்த நிலையில் இன்று 9 ந் தேதி தொகுதி ஒதுக்கீட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே சுமுக முடிவு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் 9 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இதற்கான ஒப்பத்தத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை ஆகியோர் கையெழுத்து போட்டு உறுதி செய்தனர்.
முன்னதாக மாலையில் தமிழ்நாட்டில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து சத்திய மூர்த்திபவனில் அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. ஆலோசனையில் ஈடுபட்டார்.
