47-ம் ஆண்டு நினைவு நாள்: ஈ.வி.கே.சம்பத் உருவப்படத்துக்கு மரியாதை
ஈ.வி.கே.சம்பத் 47-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
துணைத் தலைவர்கள் நாசே ஜெ.ராமசந்திரன், சொர்ணா சேதுராமன், எஸ்.எம்.இதயத்துல்லா, விஜயன் மற்றும் சுமதி அன்பரசு, கவுன்சிலர் அமிர்தவர்ஷினி, பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







