அங்கன்வாடி மைய கட்டிடம்; மார்கண்டேயன் எம்.எல்.ஏ.திறந்து வைத்தார்

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி புதூர் ஊராட்சி ஒன்றியம்,தாப்பாத்தி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 11.97-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்.மார்கண்டேயன் ரிப்பன் வெட்டிதிறந்து வைத்தார். பின்னர் குத்துவிளக்கு ஏற்றினார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார்,வெங்கடாசலம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஊராட்சி மன்ற தலைவர் பெருமாளம்மாள் பாண்டி, மாவட்ட பிரதிநிதி கார்த்திகை, ஒன்றிய ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் கணேசப்பாண்டியன் முருகன், கிளைச் செயலாளர்கள் வள்ளியப்பன், தங்க மாரியப்பன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

