கோவில்பட்டியில் ராமருக்கு சிறப்பு பூஜை – வழிபாடு
கோவில்பட்டி ராஜிவ் நகர் இபி காலனியில் பா.ஜனதா ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் அம்மன் மாரிமுத்து இல்லத்தில் வைத்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமருக்கு சிறப்பு பூஜை விளக்கேற்றி வழிபாடு நடத்தப்பட்டது.
கோவில்பட்டி காவுடியா மடம் மகாராஜா தலைமையில் பூஜை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது பூஜையில் பங்கேற்றவர்களுக்கு ராமர் புகைப்படம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய ப.ஜனதா தலைவர் மாடசாமி, பொதுச் செயலாளர் சந்தானம், கலை பிரிவு மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, மகளிர் மாவட்டத் துணைத் தலைவி அமுதா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் உமா செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.








