காமநாயக்கன்பட்டியில் வீரமாமுனிவர் மணிமண்டபம் திறப்பு

கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் உலகபுகழ்பெற்ற புனித பரலோக மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராயலத்தில் பங்கு தந்தையாக பணியாற்றியது மட்டுமின்றி காமநாயக்கன்பட்டியில் வாழ்ந்து தேன் சிந்தும் தேம்பாவணி எழுதிய வீரமாமுனிவர் நினைவாக தமிழக அரசு சார்பில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் அவருடைய திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
காமநாயக்கன்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி , கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய்,

கயத்தார் தாசில்தார் நாகராஜன் , காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலய பங்கு அதிபர் அந்தோணி குருஸ் , ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி,, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அய்யாத்துரை, கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் ஜாஸ்மின் லூர்து மேரி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். புதிதாக திறக்கப்பட்ட மணி மண்டபத்தில் உள்ள வீரமாமுனிவர் திருவுருவ சிலைக்கு அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.







