நலவாரிய தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி இ.எஸ்.ஐ.மருத்துவமனை முன்புறம் ஓய்வூதிய தொழிலாளர்கள் மற்றும் முக்குலத்தோர் தொழிற்சங்கம் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு முக்குலத்தோர் தொழிற்சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொன்னையா, பரமசிவம், சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
*ஆன்லைனில் எளிதான முறையில் பதிவு செய்திட சரியான வழிவகை செய்திடு.
*ஆன்லைன் சரியாக இயங்கவில்லை என்றால் மாற்று குத்தகைதாரர் தரவேண்டும்.
*நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ஓய்வு ஊதியம் வழங்கிடு.
*ஆன்லைன் பழுது பழுது என்று நலவாரியம் பதிவு செய்யும் தொளிலலர்களை வீணாக அலையவிடாதே.
*ஆன்லைனில் காணாமல் போன 70 லட்சம் ரெக்கார்டுகளை கண்டுபிடிக்க வேண்டும்.
*சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். புதுப்பித்தல் ஓய்வூதியம் பெறுவதற்கு சங்கங்கள் முத்திரை தேவை என்று கொண்டு வரவேண்டும்.’
*தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் நலவாரிய ஓய்வூதியம் நான்கு அல்லது 6 மாதம் கழித்து தாமதமாக வழங்குவதை தவிர்க்கவேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன,







