• October 26, 2026

காயத்ரி ரகுராம், அ.தி.மு.க.வில் இணைந்தார்

 காயத்ரி ரகுராம், அ.தி.மு.க.வில் இணைந்தார்

பா.ஜனதாவில் இருந்த நடிகை காயத்ரி ரகுராம், மாநில தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை எழுப்பினார். இதனால் இருவர் இடையே விரிசல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கி பேசியபடி இருந்தனர்.

இந்த நிலையில் பா.ஜனதாவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகினார். அவரது ராஜினாமாவை கட்சி மேலிடம் ஏற்றுகொண்டது. இதை தொடர்ந்து காயத்ரி ரகுராம், திமுகவில் இணைவதாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை காயத்ரி ரகுராம் சந்தித்து மலர்ச்செண்டு வழங்கினார். தொடர்ந்து அவர் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. விரைவில் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

அதிமுகவில் இணைந்தது குறித்து காயத்ரி ரகுராம் கூறியதாவது:-

முதலில் அதிமுகவில் இணைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் எனது குடும்பத்தினர் காலம் காலமாக அதிமுக தொண்டர்களாக தான் இருந்தனர். நன்றியை மறக்க கூடாது. எனது குடும்பத்துக்கும், தமிழகத்துக்கும் நிறைய விஷயங்களை அதிமுக செய்துள்ளது.

தமிழ்நாடு முன்னேற்றமடைய ஒரே காரணம் அதிமுக மட்டும்தான். அதிமுகவில் பெரிய தலைவர்கள் இருந்துள்ளனர். எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமை வகித்துள்ளனர். அவர்களுக்கு பிறகு எளிமை மனிதராக அதே நேரத்தில் பெரிய ஆளுமைமிக்க தலைவராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். அவரது தலைமையில் அதிமுகவில் இணைய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. அதன்படி இன்று அதிமுகவில் இணைந்துள்ளேன். அதிமுகவில் இணைந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதிமுகவில் நான் எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி இணைந்துள்ளேன்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் எனது அப்பா ரகுராம் அதிமுகவுடன் பயணித்தவர். நேரு ஸ்டேடியம் திறப்பு முதல் பல்வேறு பிரசாரத்தில் எனது அப்பா அதிமுகவுடன் பயணித்துள்ளார். அப்படி அப்பா வழியில் அதிமுகவில் இணைந்தது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது .

இவ்வாறு அவர் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *