கோவில்பட்டியில் மத்திய அரசின் பிரசார வாகனம்
கோவில்பட்டி ராஜீவ் நகர் காசி அம்மன் கோவில் அருகில் இன்று காலை 11 மணியளவில் மத்திய அரசின் வளர்ச்சி அடைந்த பாரதம் பிரசார வாகனம் வந்தது. அங்கு கூடிய பொதுமக்கள் மத்தியில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி விளக்கி கூறப்பட்டது,
கால்நடை துறை டாக்டர் ஆனந்த், சுகாதார ஆய்வாளர் அய்யலுச்சாமி மற்றும் சுகாதார மேம்பாட்டு பிரிவு அதிகாரி, பாஜக மாவட்ட துணை தலைவர் பாலு, ஒன்றிய தலைவர் மாடசாமி, பொதுச் செயலாளர் சந்தானம், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து, செயலாளர் ராஜகாந்தன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.







