• October 26, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க மதிப்பீட்டு முகாம்; கோவில்பட்டியில் 24-ந் தேதி நடக்கிறது

 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க மதிப்பீட்டு முகாம்; கோவில்பட்டியில் 24-ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்  நலன் மற்றும் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மத்திய அரசின் அலிம்கோ நிறுவனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க மதிப்பீட்டு முகாம் 4 இடங்களில் நடைபெற உள்ளது.

வருகிற 19-ந்தேதி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகம், 22-ந்தேதி சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகம், 23-ந்தேதி திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், 24-ந்தேதி கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

முகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இந்த முகாம்களில் மாற்றுதிறனாளிகளுக்கு மத்திய அரசு சார்பில் அலிம்கோ நிறுவனத்தின் மூலம் உதவி உபகரணங்களான சக்கர நாற்காலி, சக்கர சைக்கிள், மின்கலம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள்,  சிபி சேர், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு பல்வகை மாற்றுதிறன் பயிற்சி  உபகரணங்கள், காதொலி கருவி, பார்வைத்திறன் குறைபாடு உடையோர் உதவி உபகரணங்கள், திறன்பேசி, செயற்கை கை மற்றும் கால்,கால் தாங்கி உள்ளிட்டவை வழங்க மதிப்பீடு செய்யப்படும்.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுதிறனாளிகளும் தங்களுக்குரிய தேசிய அடையாள அட்டை, அதற்கான மருத்துவ சான்று நகல், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், மார்பளவு புகைப்படம் மற்றும் வருமான சான்றிதழ் நகல் ஆகிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *