• October 26, 2026

கோவில்பட்டியில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

 கோவில்பட்டியில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நாடு முழுவதும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டியில் ஜே.சி.ஐ.சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. டிஎஸ்பி அலுவலகம் அருகே இருந்து பேரணி தொடங்கியது. பேரணியை டி.எஸ்.பி. வெங்கடேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஜே.சி.ஐ. தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் கண்ணப்பன், முரளி கிருஷ்ணன்,தீபன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து கலந்து கொண்டனர், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை சுமந்தபடி அவர்கள் நடந்து சென்றனர். எட்டையாபுரம் ரோடு, ஆர்.டி.ஓ அலுவலகம் வழியாக மீண்டும் டி.எஸ்.பி. அலுவலகத்தை  பேரணி வந்தடைந்தது.

நாடார் மேல்நிலைப்பள்ளி, வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி, நாடார் நடுநிலைப்பள்ளி, எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் இன்டர்நேஷனல் பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர்.

பேரணி தொடக்க நிகழ்ச்சியில் ஜே.சி,.ஐ.திட்ட இயக்குனர் சியாம் சுந்தர் அனைவரையும் வரவேற்றார். நிர்வாகிகள்,ரகுபதி,அகிலேஷ், சூர்யா,லோகேஷ்,உதயா , வீனாபிரகாஷ்,சுரேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜேசிஐ செயலாளர் அருண் பிரசாத் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *