• October 26, 2026

ஏழை, எளிய மக்களுக்கு தொண்டு நிறுவனம் உதவி

 ஏழை, எளிய மக்களுக்கு தொண்டு நிறுவனம் உதவி

  தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியம், செம்மறி குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பூலிகுடியிருப்பு கிராமத்தில் மழை வெள்ளத்தில் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய  மக்களுக்கு  நிவாரண உதவியை  மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி வழங்கினார்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும்  1000 ரூபாய்  மதிப்புள்ள போர்வை,  துண்டு, அரிசி, பருப்பு, மசாலா பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை வழங்கினார். இதில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி, சமூக ஆர்வலர் கல்விளை அருள்ராஜ்  உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மதர் சமூக சேவை நிறுவனம் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *