• October 26, 2026

திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு கீதாஜீவன் ரூ.1 கோடி நன்கொடை

 திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு கீதாஜீவன் ரூ.1 கோடி நன்கொடை

திமுக மாநில இளைஞர் அணி முதல்மாநில மாநாடு அப்போது மாநில செயலாளராக இருந்த முக.ஸ்டாலின் தலைமையில் 2007ல் நெல்லையில் நடைபெற்றது. அதன்பின் 17 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 21ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள 2வது திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்காக நன்கொடையாக ரூ 1 கோடிக்கான காசோலையை திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார்.

மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் இன்பாரகு, வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தூத்துக்குடி மாநகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், உடனிருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *