• October 26, 2026

திமுக ஆட்சியில் புதிதாக பேருந்துகள் எதுவும் வாங்கவில்லை; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

 திமுக ஆட்சியில் புதிதாக பேருந்துகள் எதுவும் வாங்கவில்லை; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோ ஏற்பாட்டில் துறைமுகம் ராஜாஜி சாலையில் ஏழை எளியவர்களுக்கு அறுசுவை உணவு மற்றும் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  எம்ஜிஆரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு அறுசுவை உணவு  நிதி உதவியினை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :-

ஜல்லிக்கட்டு என்பது வீரத்தை பறைசாற்றுகின்ற ஒரு விழா. 1000,2000 ஆண்டாக நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்களும் மாணவர்களும் பங்கேற்றனர்.அவர்கள் கொடுத்த அழுத்தத்தில் தான் சாதகமாக தீர்ப்பு வந்தது.

அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் உத்தரவின் பேரில், அரசு விழா நடக்க வேண்டும் என்பதற்காக மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காவல்துறை அடித்து விரட்டினர். 

இதனால் ஓபிஎஸ்-ஐ ஜல்லிக்கட்டு நாயகன் என்று சொல்வது நியாயமில்லை.

இன்றைக்கு திமுகவினர் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு முதல்வரின் அப்பா பெயரை சூட்டுகின்றனர். தமிழகத்தில் வீரத்தை பறைசாற்ற பல்வேறு மன்னர்களும் வீரர்களும் இருக்கும் போது திமுக தலைவரின் பெயர் எதற்கு 

அரசு சார்பில் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் இன்றைக்கு கலைஞரின் பெயர் தான் சூட்டப்படுகிறது 

சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு என்பது கட்சி விழாவாக நடத்தப்பட்டதே தவிர ஒரு பொது விழாவாக நடத்தப்படவில்லை.   

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 80 ஏக்கர் பரப்பளவில் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டம்.திமுகவினர் அதன் வடிவமைப்பை  மாற்றிவிட்டனர் மேலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு சரிவர அறிவிக்கப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு இருந்தால் வெற்றி பெற்றிருக்கும் திமுகவினர் அவசரப்பட்டதால் இந்த திட்டம் மக்களுக்கு சிரமத்தை தருவதாக மாறி உள்ளது.

திமுகவின் ஆட்சியில் புதிதாக பேருந்துகள் எதுவும் வாங்கப்படவில்லை. மேலும் போக்குவரத்து ஊழியர்களுக்கு போதிய ஓய்வூதியம் வழங்கப்படவில்லை மற்றும் காலி  பணியிடங்களை நிரப்பவுமில்லை.

 இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *