ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தவர் சிக்கினார்
கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் ஒரு திருமண மண்டபம் அருகே எச்.டி.எப்.சி. வங்கியின் ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த மையத்தினுள் சில நாட்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் மர்ம நபர் ஒருவர் புகுந்து ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார். அப்போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் பயந்து போன அந்த நபர் அப்படியே போட்டு விட்டு தப்பி சென்று விட்டார்,
இது பற்றிய தகவல் அறிந்து வந்த மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து கைரேகை நிபுணர்கள், அந்த ஏ.டி.எம். மையத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
மேலும் இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் அடிப்படையில் மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் அந்த மர்ம நபர் கோவில்பட்டி பசுவந்தனை ரோடு, ராமலட்சுமி நகரை சேர்ந்த சங்கர் (வயது 45) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.







