• October 26, 2026

சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு: சென்னையில் இருந்து சுடர் ஓட்டத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு: சென்னையில் இருந்து சுடர் ஓட்டத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு வருகிற 21ஆம் தேதி சேலத்தில் அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதனையொட்டி, இருசக்கர வாகன பேரணி, மாநாட்டுப் பாடல் வெளியீடு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை இளைஞர் அணி மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், மாநாட்டு சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் இருந்து இன்று (18-1-24) காலை தொடங்கி வைத்தார். மேலும், அங்குள்ள அண்னா, பெரியார் மற்றும் கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு. இளைஞர் அணி அமைப்பளர் ஜோயல் உள்பட பலர் கலந்து கொண்டனர்,

இந்த சுடர், சென்னை – காஞ்சிபுரம் – விழுப்புரம் – கள்ளக்குறிச்சி – சேலம் மாவட்ட இளைஞர் அணி தோழர்களால் மாநாடு நடைபெற இருக்கிற சேலம் பெத்தநாயக்கன்பாளையத்திற்கு கொண்டு சேர்க்கப்படவுள்ளது. வெள்ளை சீருடை அணிந்த தொண்டர்கள் தொடர் ஓட்டமாக கொண்டு செல்கிறார்கள்.

சேலம் மாநாட்டுத்திடலில் வரும் வருகிற 20-ஆம் தேதி மாலை இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர்களால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்படவுள்ள மாநாட்டுச் சுடரை, அவர் பெற்று,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்க இருக்கிறார்.

சேலத்தில் நடைபெறவிருக்கிற மாநாட்டுப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு இன்று பார்வையிட்டார். பின்னர்   செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “திமுக மாநில மாநாடு இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும். தமிழகம் முழுவதும் 10,000 பேருந்துகள், 50,000 வேன்கள், அதுதவிர கார்கள், லாரிகள் என சுமார் 8 லட்சம் பேர் இந்த மாநாட்டுக்கு வருவார்கள். அவர்களுக்கு அனைத்து வகையான வசதிகளையும் செய்து இருக்கிறோம். மேலும், 3,000 ட்ரோன்கள் ஷோ நடக்கிறது. மாநாட்டில் இளைஞர் அணியினர் ஒரே மாதிரியான சீருடை அணிந்து  கலந்து கொள்ள இருக்கிறார்கள்” என்றார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *