• October 26, 2026

கோவில் வருடாபிஷேக நவக்கிரக ஹோமம்

 கோவில் வருடாபிஷேக நவக்கிரக ஹோமம்

கோவில்பட்டி  முத்துநகரில் உள்ள மகா கணபதி கோவிலில் 20ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது.  இதனையொட்டி காலை 5 மணி முதல்  கணபதி பூஜை, கும்பகலச பூஜை, யாகசாலை  பூஜை, கணபதி ஹோமம், மூலமந்திர ஹோமம், நவக்கிரக ஹோமம்,  பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

பின்னர்  யாகசாலையிலிருந்து புனிதநீர் குடம் கொண்டு செல்லப்பட்டு  கோபுரகலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. மகா கணபதி, சங்கரலிங்க சுவாமிக்கு மகா அபிஷேகம்,  கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. 

பூஜைகளை சுப்பிரமணிய சுவாமி மற்றும் கோவில் அர்ச்சகர் செல்வ சுப்பிரமணியன் ஆகியோர் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.  இதில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *