• October 26, 2026

பெண்கள் பால் குடம் சுமந்து ஊர்வலம்

 பெண்கள் பால் குடம் சுமந்து ஊர்வலம்

கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் உள்ள கன்னி விநாயகர்,  சப்த கன்னி அம்மன் கோவிலில் மூன்றாமாண்டு வருடாபிஷேக விழா  நடைபெற்றது.  இதனையொட்டி காலை 6 மணிக்கு கணபதி பூஜை, கும்பகலச பூஜை, நவக்கிரக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. 

தொடர்ந்து கதிரேசன் கோவில் மலை அடிவாரத்திலிருந்து 31 பெண்கள் பால் குடம் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

தொடர்ந்து கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது.  பூஜைகளை சுப்பிரமணிய சுவாமி மற்றும் முத்துமணி சங்கர் ஆகியோர் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.  சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *