• October 26, 2026

ஆக்கி போட்டியில் 15 அணிகள் பங்கேற்பு : யங் சேலஞ்சர்ஸ் அணி  முதலிடம் பிடித்தது 

 ஆக்கி போட்டியில் 15 அணிகள் பங்கேற்பு : யங் சேலஞ்சர்ஸ் அணி  முதலிடம் பிடித்தது 

கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஆக்கி மைதானத்தில், யங் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக  ஆண்கள் ஆக்கி போட்டி இன்று புதன்கிழமை நடைபெற்றது. மொத்தம் 15 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

 ரசிகர்களின் ஆரவாரத்துடன் நடந்த போட்டிகளில் கோவில்பட்டி ஆக்கி கிளப் , யங் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், இலுப்பை யூரணி ஆக்கி கிளப், மற்றும் அசோக் நினைவு ஆக்கி கிளப் ஆகிய அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

 மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில்  கூசாலிபட்டி அசோக் நினைவு ஆக்கி அணி  4-2 என்ற கோல் கணக்கில் இலுப்பையூரணி ஆக்கி கிளப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று மூன்றாவது இடத்தை தட்டி சென்றது.

 இறுதி போட்டியில் யங் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 4 -0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி ஆக்கி கிளப் அணியை வீழ்த்தி முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது.

 முதல் நான்கு இடங்களுக்கு கே. டி. எஸ். பிரதர்ஸ் சார்பாக பரிசு கோப்பை வழங்கப்பட்டது.பரிசளிப்பு விழாவுக்கு ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் குரு சித்ர சண்முக பாரதி தலைமை தாங்கினார். ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டி ராஜா, கயத்தார் ஆக்கி கிளப் செயலாளர் குமார், முன்னாள் ராணுவ ஆக்கி வீரர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொழிலதிபர் உலகமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு  கோப்பைகளை வழங்கி சிறப்பித்தார். போட்டியின் நடுவர்களாக திருச்செல்வம் தலைமையில் கார்த்திக் ராஜா, அஸ்வின்  காளிதாஸ்  , மதன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செயல்பட்டனர். விழா முடிவில் உடற்கல்வி ஆசிரியர் சுதாகர் நன்றி கூறினார். தொடக்கத்தில் மதன்குமார் வரவேற்று பேசினார்.

சிறந்த வீரருக்கான விருதை அசோக் நினைவு ஆக்கி அணி வீரர் கவுதம், சிறந்த கோல் கீப்பர்  விருதை இலுப்பையூரணி ஆக்கி கிளப் அணி வீரர் பாலா  பெற்றனர்.

 போட்டியின் அனைத்து ஏற்பாடுகளையும் யங் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் மாரியப்பன் , ராணுவ வீரர் பார்த்திபன், கருப்பசாமி, விஜி ஆகியோர் செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *