கோவில்பட்டி கோவிலில் தைப்பொங்கல் சிறப்பு பூஜை
கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் தைப்பொங்கல் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு வெற்றி விநாயகர் முத்துமாரியம்மன் சந்தன கருப்பசாமிக்கு மஞ்சள், பால் முதலான 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து சர்க்கரை பொங்கல், கரும்பு, மஞ்சள் கிழங்கு, பணங்கிழங்கு படைத்து சூரிய பகவானை வழிபட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய சுவாமி செய்தார். இதில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு, வடை பிரசாதமாக வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமனன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.







