திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பாக 10 ம் ஆண்டு திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி மாணவ மாணவிகள்இடையே திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு நற்பணி இயக்கத் தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமை தாங்கினார். மதிமுத்து, ரத்தினவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முருகேச பாண்டியன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கினார் காமராஜ், பொன் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்







