கிராமிய கலைஞர்களுடன் பொங்கல் கொண்டாடிய கனிமொழி
சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விடுதி வளாகத்தில் சென்னை சங்கமம் – நம்ம ஊர் திருவிழா நடைபெற்று வருகிறது.
இன்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள கிராமிய கலைஞர்களுடன் இணைந்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பொங்கல் விழா கொண்டாடினார்.
பாரம்பரிய இசைக் கலைஞர்கள், வாத்தியங்கள் இசைக்க கனிமொழி எம்.பி. உற்சாகமாக பொங்கல் வைத்துக் கொண்டாடினார். 700-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்களுக்கு இனிப்பு மற்றும் புத்தாடைகளை கனிமொழி எம்.பி வழங்கினார்.









