• October 26, 2026

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் திருக்குடும்ப திருவிழா

 கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் திருக்குடும்ப திருவிழா

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் திருக்குடும்ப திருவிழா , ஆலய  பங்கு தந்தை சார்லஸ் அடிகளார், தலைமையில் உதவி பங்கு தந்தை அந்தோணிராஜ் அடிகளார் முன்னிலையில் நடைபெற்றது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சூசையப்பரும் அன்னை மரியாவும், இறைமகன் இயேசுகிறிஸ்துவும் வாழ்ந்த குடும்பமே திருக்குடும்பமாகும்.இக்குடும்பத்தில் நிலவிய அன்பு,அக்கறை,நம்பிக்கை,இறைஞானம் இவை அனைத்தும் இறைமக்களான நம் குடும்பத்தில் நிலவவேண்டும்  என ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவ ஆலயங்களில் திருக்குடும்ப திருவிழா கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு திருவிழாவில்  அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் மற்ற குடும்பத்தினருக்கு பரிசு பொருட்கள்  பரிமாறி அன்பை பகிர்ந்து கொண்டனர். இறைவாழ்வில் 60 ஆண்டுகள் நிறைவு பெற்ற அருட்சகோதரி சூசைலூயிசுக்கு  பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இல்லங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் வைத்தவர்களுக்கு முதல்,இரண்டாவது,மூன்றாவது பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஜான்போஸ்கோ பள்ளி முதல்வர்  தயா, அருட்சகோதரிகள் பென்சி, குழந்தை தெரஸ் ஆகியோர் மற்றும் இறைமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *