எழுத்தாளர் கி. ராஜநாராயணன் பற்றிய ஆவண படம் வெளியீடு
கோவில்பட்டி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கிளை சார்பாக, கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் பற்றிய ஆவண படம் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் த. அறம் எழுதிய “நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்” என்ற புத்தக ஆய்வு மற்றும் எட்டயபுரத்து ஏழிசை புலவா என்ற பாடல் வெளியிடும் நிகழ்வு ஆகியவை கோவில்பட்டி கி.ரா நினைவரங்கத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் கோவில்பட்டி கிளைச் செயலாளர் அமல புஷ்பம் தலைமை தாங்கினார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவில்பட்டி நகர தலைவர் கே .பி ராஜகோபால் முன்னிலை வகித்தார் இந்நிகழ்வில் புதுவை இளவேனில் தயாரித்துள்ள ‘இடைசெவல்` என்ற ஆவணபடம் வெளியிடப்பட்டது. மருத்துவர் த. அறம் எழுதிய நூற்றாண்டு கண்ட ஆளுமைகள் என்ற புத்தகம் பற்றி தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் கோவில்பட்டி பொருளாளர் சு. மாரிமுத்து திறனாய்வு செய்தார்.தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் த.அறம் வாழ்த்தி பேசினார்
பின்பு நடைபெற்ற நிகழ்வில் எட்டயபுரத்து ஏழிசை பலவா என்ற பாடல் ஒலிப்பேழையை மருத்துவர் த.அறம் வெளியிட திருநெல்வேலி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சந்திரசேகரன், கவிஞர் சிவானந்தம் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். பாடலாசிரியர் மு.கண்ணன் ஏற்புரை நிகழ்த்தினார் ஆர் .ஜே. மணிகண்டன் ஒருங்கிணைத்தார்.
பாரதி முற்போக்கு வாலிபர் சங்க செயலாளர் பாலமுருகன்,ஆர்.வெங்கடேஷ், விவேகாநந்தன், ஜெயா ஜனார்த்தனம் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் ஜி .சத்திய பாலன்,கோவில்பட்டி நிர்வாகிகள் சக்தி செல்லப்பா ,அ.மணிகண்டன் மற்றும் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலை இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள்.