பேரிடர் பாதித்த மாவட்டமாக தூத்துக்குடியை அறிவிக்ககோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 பேரிடர் பாதித்த மாவட்டமாக தூத்துக்குடியை அறிவிக்ககோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அதிக கனமழை பெய்த மாவட்டங்களை இயற்கை பேரிடர் மாவட்டமாக அறிவித்திட கோரி மத்திய  அரசை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  எட்டயபுரம் தாலுகா குழு செயலாளர் சோலையப்பன் தலைமையில் எட்டையபுரம் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஆர்ப்பாட்டத்தை  தொடங்கி வைத்தார். மத்திய அரசு பேரிடர் பாதித்த மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை அறிவிக்க வேண்டும். மாநில அரசு கேட்ட பேரிடர் இழப்பு தொகையினை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் நல்லையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் பாலமுருகன், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் சேது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கனகராஜ்,  தமிழ்நாடு விவசாய சங்க  செயலாளர் ரவீந்திரன், எட்டயபுரம் நகர செயலாளர் முனியசாமி ஆகியோர் கோரிக்கைகளை  வலியுறுத்தி பேசினார்கள்.
தூத்துக்குடி மாவட்ட மக்கள்  அதிக கனமழையால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை  இழந்துள்ளனர் எனவே ,மத்திய  அரசு அதிகம் கனமழை பாதித்த தூத்துக்குடி மாவட்டத்தை இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் பயிர் காப்பீட்டு தொகை உடனடியாக விடுவிக்க வேண்டும் நிவாரணத் தொகையாக ஏக்கருக்கு  30 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்க  வேண்டும் விவசாயிகளின் பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோஷம் எழுப்பினார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *