தாயை அடித்துக் கொன்ற மகன், உடந்தையாக இருந்த நண்பன் கைது
தூத்துக்குடி செல்வநாயகபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி (வயது 67). இவரது கணவர் அந்தோணி பிச்சை 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு டெரிசன், ரூபேசன் (40) ஆகிய மகன்களும் சபீதா என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
தூத்துக்குடி சக்தி விநாயகபுரம் 1-வது தெருவில் உள்ள தாய் வீட்டின் மாடி பகுதியில் தனியாக வீடு கட்டி ரூபேசன் குடியிருந்து வந்ததாராம். இந்த் நிலையில் தாய் கலைச்செல்விக்கும் ருபேசனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே, அங்கிருந்து காலி செய்து விட்டு கோரம்பள்ளம் அருகில் உள்ள அந்தோணியார் புரம் கிராமத்தில் மனைவியுடன் வசித்து வந்தார்.
சமீபத்தில் ஏற்பட்ட மழைவெள்ளம் காரணமாக அங்கு வசிக்க முடியாமல் . மீண்டும் சக்தி விநாயகபுரம் உள்ள மாடியில் குடியிருப்பதற்காக தாயிடம் ரூபெசன் அனுமதி கேட்டுள்ளார். இங்கு வந்தால் மீண்டும் பிரச்சனை வரும் என்பதால் அனுமதிக்க முடியாது என்று கலைச்செல்வி கூறியுள்ளார்.
இதையடுத்து மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு ரூபேசன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.இந்நிலையில், நேற்று தனது சகோதரர் டெரிஷனுக்கு போன் செய்த ரூபேசன், தாய் கலைச்செல்வியை கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார். இதனால் பயந்து போன டெரிசன் நேரில் சென்று பார்த்த போது தாய் கலைச்செல்வி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து வடபாகம் காவல் நிலையத்திற்கு டெரிசன் தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து சென்ற வடபாகம் காவல் நிலைய போலீசார் கலைச்செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து தாயை அடித்துக் கொன்ற மகன் ருபேசன் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரான \தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த சூசை அந்தோணி (வயது 34) ஆகியோரை கைது செய்தார்.







