2024 இடங்களில் கோள்கள் திருவிழா; அஸ்ட்ரானமி  சயின்ஸ் சொசைட்டி திட்டம்

 2024 இடங்களில் கோள்கள் திருவிழா; அஸ்ட்ரானமி  சயின்ஸ் சொசைட்டி திட்டம்

.தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி கடந்த 3 வருடங்களாக தமிழ்நாடு முழுவதும் வானியல் தொடர்பான பரப்புரை மற்றும் தொலைநோக்கி மூலம்  நிலா, வியாழன், செவ்வாய்,சனி போன்ற கோள்களை காணும் வான் நோக்கல் நிகழ்வு போன்ற செயல்பாடுகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கொண்டு செல்லும்  மக்கள் இயக்கமாக செயல்பட்டு வருகிறது.

மேலும் நட்சத்திர விழாக்கள், நிலா திருவிழா-200, அரசு பள்ளி மாணவர்களுக்கான புதியன விரும்பு நிகழ்வு, புத்தகத் திருவிழா, ஏற்காடு மலர் கண்காட்சி, 1000 இடங்களில் அஸ்ட்ரானமி என பல நிகழ்வுகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் 2023ம் ஆண்டில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு தகவல்களை  தன்னார்வ அடிப்படையில் கொண்டு சேர்த்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் உள்ள 39 அரசு மாதிரி பள்ளிகளில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைடன் இணைந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை நேரங்களில் வானியல் வகுப்புகளையும், தொலைநோக்கிகள் மூலம்  வான்பொருட்களை காட்டும் நிகழ்வினையும் நிகழ்த்தி கொண்டு வருகிறது.

இதன் அடுத்த கட்டமாக இந்த ஆண்டு  அனைத்து அரசு பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள், குக்கிராமங்கள் வரை வானியலை கொண்டு சேர்க்கும் ஒரு முன்னெடுப்பாக கோள்கள் திருவிழா – 2024 எனும் நிகழ்வை 2024ம்ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை தமிழ்நாடு முழுவதும்  2024 இடங்களில் வானியல் நிகழ்வுகளை தன்னார்வ  நோக்கில் கொண்டு செல்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கோள்கள் திருவிழா தொடக்க நிகழச்சி கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் சார்பில் கடலையூர் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் திலகவள்ளி,சிவசங்கரேஸ்வரி, ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அறிவியல் ஆசிரியை பானுமதி அனைவரையும் வரவேற்றார்.

கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்குமார், முத்து முருகன் ஆகியோர் வானியல் குறித்தும் தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும் பயிற்சி அளித்தனர்.

200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிட்டனர்.

பள்ளி ஆசிரியர்கள் ஜெயமுருகன் குணசேகரன், இளநிலை உதவியாளர் நாகராஜ்,அலுவலக உதவியாளர் சண்முகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கணித பட்டதாரி ஆசிரியர் அய்யமுத்துராஜா நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *