பிரேமலதாவுடன் மத்திய மந்திரி பியூஸ் கோயல் சந்திப்பு;
சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய தொழில்துறை, வர்த்தகம்,நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளி துறை மந்திரி .பியூஷ்கோயல் கலந்து கொண்டார்.
இன்று (8.1.2024) சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்று மத்திய மந்திரி பியூஸ் கோயல், விஜயகாந்த் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேமுதிக பொதுச்செயலாளரும் விஜய்காந்த் மனைவியுமான பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது பா.ஜனதா மாநில நிர்வாகி கரு நாகராஜன்உடனிருந்தார். தேமுதிக தரப்பில் பிரேமலதா மற்றும் சுதிஷ் ,மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.