• June 6, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை அளவு முழு விவரம்

 தூத்துக்குடி மாவட்டத்தில் மழை அளவு முழு விவரம்

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ந் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27-ந் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள அந்தமான் கடல் பகுதியில் நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. 

இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

தூத்துக்குடி- 30.30

ஸ்ரீவைகுண்டம்- 18.

திருச்செந்தூர்- 88

சாத்தான்குளம்- 14

கோவில்பட்டி- 53.50

கயத்தார்:- 47

கழுகுமலை- 87

கடம்பூர்- 47

எட்டயபுரம்- 43.20

விளாத்திகுளம- 83

காடல்குடி- 28

வைப்பார்- 39

சூரங்குடி- 21

ஓட்டப்பிடாரம்- 52

வேடநத்தம்- 10

கீழஅரசரடி- 35

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மொத்தம் 846.60 மில்லி மீட்டரும் சராசரியாக  44.53 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மணியாச்சியில் மழை எதுவும்  பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *