• November 1, 2024

தி.மு.க. இளைஞர் அணியின் இருசக்கர வாகன பேரணிக்கு  கோவில்பட்டியில் வரவேற்பு

 தி.மு.க. இளைஞர் அணியின் இருசக்கர வாகன பேரணிக்கு  கோவில்பட்டியில் வரவேற்பு

திமுக இளைஞரணி சார்பில் மாநில உரிமை மீட்புக்கான மாநில மாநாட்டின் வாகன பேரணிக்கு கோவில்பட்டியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திமுக இளைஞரணியின் மாநில உரிமை மீட்புக்கான 2வது மாநில மாநாடு டிசம்பர் 17ல் சேலத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 188 இரு சக்கர வாகனங்கள் பேரணியை கன்னியாகுமரியில் மாநில இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

இந்த் பேரணி  13 நாட்கள் பயணம் செய்து  234 சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறது.  504 பிரசார மையங்களில் 8647 கிலோமீட்டர் தூரம் இந்த பேரணி செல்கிறது.

இந்த் பேரணியினர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு இன்று வருகை தந்தனர். அண்ணா பஸ் நிலையம் அருகே  கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர். ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பொதுமக்களிடம் நீட் தேர்வு விலக்கு.நமது இலக்கு என்பதை வலியுறுத்தி கையொப்பம் பெறப்பட்டது.இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *