கூட்டுறவு வாரவிழாவில் நலத்திட்ட உதவிகள்

விளாத்திகுளத்தில் நடந்த 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் பதிவாளர் நடுக்காட்டுராஜா ,துணைப் பதிவாளர் சுப்புராஜ், கூட்டுறவு சார்பதிவாளர் மகேஸ்வரன், செயலாளர் நாகமணி, சூரங்குடி கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன், திரைப்பட நடிகர் கந்தசாமி, விளாத்திகுளம் திமுக பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
