கோவில்பட்டியில் பா.ஜனதா சைக்கிள் பேரணி
பிரதமர் நரேந்திரமோடியின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.
இன்று காலை 11 மணியளவில் மந்திதோப்பு சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் இருந்து தொடங்கி கதிரேசன் கோவில் ரோடு, பார்க் ரோடு மெயின் ரோடு, மார்க்கெட் ரோடு, புது ரோடு வழியாக எட்டையபுரம் சாலை வழியாக மீண்டும் மாவட்ட அலுவலகம் வந்து அடைந்தது.
இந்த பேரணி முன்னாள் மாவட்ட தலைவர் போத்தீஸ் ராமமூர்த்தி தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் வேல் ராஜா முன்னிலையில் நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர் குமார், சரவண கிருஷ்ணன், துணைத் தலைவர் ராஜ்குமார், பொருளாளர் கே.கே.ஆர். கணேசன், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து , நகரத்தலைவர் சீனிவாசன், நகர பொதுச்செயலாளர் விஜயகுமார், கிழக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி, மேற்கு ஒன்றிய தலைவர் கந்தசாமி ,மற்றும் 200க்கும் மேற்பட்டவர்கள் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்