• June 7, 2025

கோவில்பட்டி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை 

 கோவில்பட்டி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை 

கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில்  சங்கடஹர சதுர்த்தி  பூஜை நடைபெற்றது.

இதனையொட்டி ஸ்ரீ வெற்றி விநாயகருக்கு மஞ்சள்,  பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்ரமணிய ஐயர் செய்தார்.சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *